திருகோணமலை ஆண்டாம்குளம் பகுதியில் 7 வயதுடைய சிறுமியொருவருக்கு பாலியல் ரீதியில் தொடையில் கிள்ளிய சந்தேக நபயொருவரை இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (21) உத்தரவிட்டார்.
சம்பாலேன், ஆண்டாம் குளம், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரின் வீட்டுக்கு அயல் வீட்டு 7 வயதுடைய சிறுமி சென்றதையடுத்து சிறுமியை அழைத்து பாலியல் ரீதியில் தொடை கிள்ளியுள்ளதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.