நடிகர் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திங்களன்று ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சமீபத்தில் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் அளித்த ஆலோசனையின்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொஞ்சம் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
எல்லோரும் முகக்கவசம் அணியுங்கள்; பாதுகாப்பாக இருங்கள். உடல்நலம் தேறியதும் தகவல் அளிக்கிறேன். அனைவருக்கும் எனது அன்பு! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆறுதலும், பிரார்த்தனைகளும் தெரிவித்து வருகின்றனர்.