முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ரிசாத் பதியூதீனை கைது செய்வதை தடுக்கிறார். அவ்வாறு தடுப்பதற்கு அவருக்கு இருக்கும் அதிகாரம் என்ன?
ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையிலும் ரிஷாட் பதியூதீனை கைது செய்யும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்புவதற்கான அதிகாரம், மஹிந்த தேசப்பிரியவுக்கு யாரால் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.