களுத்துறை மாவட்ட முன்னாள் எம்பியும், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற வேட்பாளருமான பாலித தேவரப்பெரும மீது மத்துகமையில் நேற்று (22) மாலை குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதன்போது காலில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நீர்த் திட்டம் தொடர்பான முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருடைய இடதுகால் தொடை கிழியும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.