web log free
July 02, 2025

தாயைக் கண்டால் உடன் அறிவிக்கவும்

வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வரும் 31வயதுடைய 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை என அவரின் கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து அவரின் கடைசி மகளுடன் (7வயது) 4 பிள்ளைகளின் தாயான 31வயதுடைய கிரிதரன் வக்சலா (சுரேக்கா) கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றைய மூன்று பிள்ளைகளையும் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

அன்றைய தினம் மாலையாகியும் குறித்த பெண் வீடு திரும்பவில்லை அதனையடுத்து அவரின் கணவரினால் மனைவியை காணவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாயாரை காணாது அவரின் மூன்று பிள்ளைகளும் தவிர்த்து வருவதுடன் சாப்பாட்டினையும் தவிர்த்து சோகத்தில் நிற்கின்றனர்.

காணாமல் போன குறித்த பெண்ணின் இடது பக்க கண்ணத்தில் கருப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் அவரின் இறுதியாக சென்ற சமயத்தில் நீல நிற சுடிதாரும் வெள்ளை நிற சுடிதார் காலும் அணிந்துள்ளதாக அவரின் கணவர் தெரிவித்துள்ளார்.

இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழேயுள்ள இலத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கவும்.

கிரிதரன் - 0775255861

மோகன் - 0766327556

முகிசன் - 0778899787
 
 
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd