கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நோயாளி, முல்லேரியாவ ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிவிட்டார்.
அவர், வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட 22 வயதானவர் ஆவார்.
கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த அவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எம்பிலிப்பிட்டியவை சேர்ந்த மேற்படி நபர், கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமையால், ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொரோனா தொற்றியிருக்கிறாதா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே அந்த நபர், இன்று (25) காலையில் தப்பியோடிவிட்டார்.
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், பல குழுக்களை நியமித்து தேடுதல் நடவடிக்கைகளை முடுகி விட்டுள்ளனர்.