கடந்த 10 வருடங்களில் ஆகக் குறைந்தது 20 சிறுவர்களை (மாணவர்கள்) பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், தனியார் வகுப்புகளை நடத்தும் 54 வயதான ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிப்பிட்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடமிருந்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வீடியோகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுவர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டள்ளன என தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினர் அறிவித்துள்ளனர். பன்னிப்பிட்டியைச் சேர்ந்த மேற்படி நபரை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போ, ஓகஸ்ட் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.