இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீரில் நடந்த தற்கொலைத் தாக்குதல் குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமானவர்கள் உரிய தண்டனையைப் பெறுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேற்று முன்தினம், 350 கிலோகிராம் எடை கொண்ட வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, இந்திய இராணுவத்தின் வாகனத்தோடு மோதிய சம்பவத்தில் அந்தத் தாக்குதல் இடம்பெற்றது.
காஷ்மீரின் புல்வாமா (Pulwama) வட்டாரத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், குறைந்தது 37 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பு, அந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள இந்தியா உறுதி தெரிவித்துள்ளது.
அதன்படி, பாகிஸ்தான் கொண்டிருக்கும், 'வர்த்தகத்திற்கான ஆக விருப்பமான நாடு' என்ற நிலை இரத்து செய்யப்படும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.