web log free
May 30, 2026

´அங்கொட லொக்கா´வின் கழுகு சிக்கியது

போதைப் பொருள் வர்த்தகரான ´அங்கொட லொக்கா´ என்பவரால் போதைப் பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு ஒன்று அத்துருகிரிய பொலிஸாரினால் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த கழுகு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கழுகு சுமார் 15 கிலோவை சுமக்கும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ´அங்கொட லொக்கா´ வின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 2 நபர்களுடன் 1 ஏயார் ரைவல் துப்பாக்கியும் 10 ரவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd