குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜனவரி மாதம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டு, காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது .