சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் திரைசேரி ஆகியவற்றுடன் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள மூன்று வருடங்களுக்கு விரிவாக்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான கடன் உதவி தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வருகை தந்திருந்தனர்.
2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்குவதற்கான மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தினால் உத்தியோபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து, சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியது.
மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமாரானதை அடுத்து, நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவொன்று அமெரிக்கா சென்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்து பணிப்பாளர் கிறிஸ்டைன் லகர்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன்போது, இலங்கைக்கு வருவதற்கு கிறிஸ்டைன் லகர்டே உடன்பட்டிருந்தார்.
இந்த கடன் திட்டத்தின் அடிப்படையில் தற்போதுவரை நான்கு சந்தர்ப்பங்களில் 759.9 மில்லியன் டொலர் கடன் தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெறும் பேச்சு வார்த்தைகளில் மேற்கொள்ளப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த கடன் திட்டம் இலங்கைக்கு வழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.