web log free
October 18, 2025

பதவியேற்றார் மஹிந்த- 14ஆம் திகதி அமைச்சரவை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நாட்டின் 13ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வு களனி ரஜமஹா விகாரையில் இன்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள் மற்றும் வௌிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளது.

Last modified on Sunday, 09 August 2020 05:51
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd