ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நாளை (10) திங்கள் கிழமை முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கடும் தோல்வியை அடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே, முக்கிய அறிவிப்பை ரணில் விக்கிரமசிங்க விடுக்கவுள்ளார்.
கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவதற்கு அவர் தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.
எனினும், புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரையிலும் தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க இருப்பார் என்றும் அறியமுடிகின்றது.