web log free
December 27, 2024

சபைக்குள் செல்லும் 47 உறவினர்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு  நான்கு தந்தைகளும் – மகன்களும், அரசியல் வாதிகளின் உறவினர்களாக 47 பேரும் பாராளுமன்ற  உறுப்பினர்களாக அமரவுள்ளனர்.

நாடாளுமன்றுக்கு தெரிவான தந்தை மகன்களா,

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான நாமல் ராஜபக்ஸ
  • சமல் ராஜபக்ஸவின் புதல்வரான ஷஷீந்திர ராஜபக்ஸ
  • தினேஷ் குணவர்தனவின் புதல்வராக யதமினி குணவர்தன
  • ஜனக பண்டார தென்னகோனின் புதல்வரான பிரமித்த பண்டார தென்னகோன்

உறவினர்களாக,

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் சமல் ராஜபக்ஸ
  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க
  • மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் சஜித் பிரேமதாச
  • முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவின் புதல்வர் காஞ்சன விஜேசேகர
  • முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் புதல்வர் கனக ஹேரத்
  • மறைந்த முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரட்னவின் புதல்வர் அனுராத ஜயரத்ன
  • முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகமவின் உறவினரின் மகன் திலும் அமுனுகம
  • மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க
  • மறைந்த முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் புதல்வர் லொஹான் ரத்வத்த
  • மறைந்த முன்னாள் அமைச்சர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் புதல்வர் காவிந்த ஜயவர்தன
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெர்டி பிரேமலால் திசாநாயக்கவின் புதல்வர் துமிந்த திசாநாயக்க
  • மறைந்த முன்னாள் அமைச்சர் ரெஜி ரணதுங்கவின் புதல்வர் பிரசன்ன ரணதுங்க
  • மறைந்த முன்னாள் அமைச்சர் கலாநிதி ரிச்சட் பத்திரணவின் புதல்வர் ரமேஷ் பத்திரண
  • முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சொய்ஸாவின் மனைவி முதிதா பிரசாந்தி
  • மறைந்த முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடம்கொடவின் புதல்வர் இசுரு தொடம்கொட
  • மறைந்த முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடம்கொடவின் சகோதரியின் புதல்வரான சந்திம வீரக்கொடி
  • மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் எச்.ஜி.ஜி. நெல்சனின் புதல்வர் கிங்ஸ் நெல்சன்
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் மொஹான் சாலிய எல்லாவலவின் புதல்வர் அகில எல்லாவல
  • மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் தர்மதாஸ வன்னிஆரச்சியின் புதல்வி பவித்ரா வன்னிஆரச்சி
  • மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமான்
  • மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீன்மஹத்தயா லியனகேவின் புதல்வர் வருண லியனகே
  • மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி அத்துகோரளவின் சகோதரி தலதா அத்துகோரள
  • முன்னாள் அமைச்சர் சரத்சந்திர ராஜகருணாவின் புதல்வர் ஹர்ஷன ராஜகருணா
  • மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ கவிரத்னவின் மனைவி ரோஹினி கவிரத்ன விஜேரத்ன
  • முன்னாள் அமைச்சர் ஜகத் பாலசூரிய மற்றும் முன்னாள் ஆளுநர் குமாரி பாலசூரியவின் புதல்வர் தாரக பாலசூரிய
  • இலங்கை மக்கள் கட்சியின் ஆரம்ப செயலாளர் ரஞ்சித் நவரத்னவின் புதல்வர் அசங்க நவரத்ன
  • முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டி.வி. உபுலின் புதல்வர் டி.வி. சான
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
  • முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் உறவினர் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்
  • மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் தயா டீ.பெஸ்குவலின் சகோதரரின் புதல்வர் அனுப பெஸ்குவல்
  • மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் ரூபா கருணாதிலக்கவின் உறவினர் மகன் கயந்த கருணாதிலக்க
  • ஊவா மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் அனுர விதான கமகேவின் சகோதரர் தேனுக விதான கமகே
  • மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்ரபாலவின் புதல்வர் துஷ்மந்த மித்ரபால
  • முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்னவின் உறவினர் மகன் உதயகாந்த குணதிலக்க
  • மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.வின்சன்ட் பெரேராவின் புதல்வர் சுஜித் சஞ்சய பெரேரா
  • மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.ஆர். ஜயரத்னவின் புதல்வர் பியங்கர ஜயரத்ன
  • 94ம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி வாகன விபத்தில் பலியான கொட்ப்ரி பெர்னாண்டோவின் உறவினர் மகன் அருந்திக பெர்னாண்டோ
  • மறைந்த முன்னாள் அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவின் புதல்வர் நிரோஷன் பெரேரா
  • மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீடின் மருமகன் அப்துல் ஹலீம் மொஹமட்
  • முன்னாள் பிரதியமைச்சர் எச்.பி.சேமசிங்கவின் புதல்வர் ஷெஹான் சேமசிங்க
  • முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.டிபிள்யு. அலவத்துவலவின் புதல்வர் ஜே.சி.அலவத்துவல
  • முன்னாள் மாகாண சபை உறுப்பினர், கொல்லப்பட்ட தேஷபந்து நாமல் குணவர்தனவின் சகோதரி கோகிலா ஹர்ஷனி குணவர்தன
  • இலங்கை மக்கள் கட்சியின் மறைந்த தலைவர் விஜயகுமாரதுங்கவின் உறவினர் மகன் ரஞ்சன் ராமநாயக்க
  • மறைந்த முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் மனைவி மஞ்சுளா திசாநாயக்க
  • மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவின் மனைவி சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே
  • முன்னாள் நிதியமைச்சர் என்.எம்.பெரேராவின் உறவினர் மகன் பேராசிரியர் திஸ்ஸ விதாரண
  • முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீலால் விக்ரமசிங்கவின் மனைவி ராஜிகா விக்ரமசிங்க

இவர்களில் பலர் முன்னைய நாடாளுமன்றிலும் இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd