ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில், தீர்மானம் எடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (10) கூடவுள்ளது.
இந்நிலையில், கட்சியின் தலைமையை ஏற்பதற்கு மும்முனை போட்டிகள் நிலவுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அப்பதவியை விட்டுக்கொடுக்க தான் தயாரில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உப-தலைவர் ரவி கருணாநாயக்க அப்பதவியை கேட்டு அடம்பிடிக்கிறார்.
மறுபக்கத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவும் தலைமை பதவி தனக்கு வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆனால், தலைமை பொறுப்பை ருவன் விஜயவர்தனவுக்கு வழங்கிவிட்டு, பின்னால் இருந்து, வழிநடத்தும் வியூகங்களையே ரணில் விக்கிரமசிங் வகுத்துவருகின்றார் என அறியமுடிகின்றது.