எதிர்வரும் 12ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ள அமைச்சரவையில் அதிரடியான மாற்றங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளன என அறியமுடிகின்றது.
பிரதி பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சு இரண்டுமே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வசமிருக்கும். ஜனாதிபதி தன்வசம் வைத்துகொள்ளும் அமைச்சுகளை தவிர 26 பேருக்கு மட்டுமே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, கண்டியில் நடைபெறும் அமைச்சரவை பொறுப்பேற்கும் வைபவத்தில், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்படமாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கையை முன்வைப்பதால், ஜனாதிபதியும் பிரதமரும் கடுமையான அதிருப்தியில் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து உரிய பதில் கிடைக்காமையால் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர்.