9ஆவது நாடாளுமன்றத்திற்கான சபாநாயகர் பதவிக்காக பலருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சபாநாயகர் பதவிக்கு மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மொட்டுக் கட்சி எம்.பி மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போதே புதிய சபாநாயகரும் நியமிக்கப்படுவார்.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சபாநாயகராக இருந்த முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மீதும் பலருடைய பார்வை திரும்பியிருப்பதாக கூறப்படுகின்றது