2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பில், கடந்த அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த, மூன்று முக்கியஸ்தர்களிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, ஆகிய இருவரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதியன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரட்நாயக்க, ஆகஸ்ட் 21ஆம் திகதியன்று அழைக்கப்பட்டுள்ளார்.