web log free
January 14, 2025

ஓய்வூதியத்தை இழந்த எம்.பிகள் விவரம்

இலங்கையின் 08ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 27 பேர் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாய்ப்பை இழந்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் 5 வருடங்களை பூர்த்தி செய்யும் உறுப்பினர்கள் பாராளுமன்ற ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்கள். ஆயினும், இம்முறை பாராளுமன்றம் நான்கரை வருடத்தில் கலைக்கப்பட்டதோடு, மீண்டும் குறித்த 27 பேரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகாத நிலையில், அவர்கள் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

அவர்களது பெயர் விபரம் வருமாறு:

ஐக்கிய தேசிய முன்னணி (UNF):

  1. மலிக் சமரவிக்ரம
    2. ஹிருணிகா பிரேமச்சந்திர
    3. சத்துர சேனாரத்ன
    4. ஆனந்த அலுத்கமகே
    5. பந்து லால் பண்டாரிகொட
    6. சந்திம கமகே
    7. கருணாரத்ன பரணவிதான
    8. தயா கமகே
    9. ஆஷு மாரசிங்க
    10. சமன் ரத்னபிரிய
    11. நடராஜா திலகேஷ்
    12. மொஹமட் மன்சூர்
    13. சிசிர குமார
    14. நாலக கொலொன்ன
    15. துசித விஜேமான்ன
    16. சந்தீப் சமரசிங்க
    17. மொஹமட் நவவி
    18. மொஹமட் சல்மான்
    19. மயந்த திஸாநாயக்க
    20. பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA)
21. நிரோஷன் பிரேமரத்ன
22. மனோஜ் சிறிசேன
23. மலித் ஜயதிலக (தேசிய பட்டியல்)

மக்கள் விடுதலை முன்னணி (JVP):
24. நலிந்த ஜயதிஸ்ஸ

தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA)
25. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
26. சிவப்பிரகாஷம் சிவமோகன்
27. கவிந்திரன் கோடீஸ்வரன்

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd