ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பாக தீர்மானம் மேற்கொள்வதற்கு அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான மேலும் சில உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கான பெயர் விவரம் பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.