இன்று முதல் அமுலாகும் வகையில், நான்கு நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
முழு நாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கீர்த்தி கருணாரத்ன தெரிவித்தார்.
அதற்கமைய,
முதல் வலயத்தில் மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
இரண்டாவது வலயத்திற்கு இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
மூன்றாவது வலயத்தில் இரவு 8 மணி தொடக்கம் 09 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
நான்காவது வலயத்தில் இரவு 09 மணி தொடக்கம் 10 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.