கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இன்று (18) முற்பகல் முன்னிலையாகியிருந்தார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவுறுத்தலுக்கு அமைய, அவர் அங்கு சென்றிருந்தார்.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள அரச புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.