திருமண வீட்டில் குடித்திருந்தவர் மீது தாக்குதல் நடத்தினால் அந்த திருமண வீடே, அல்லோல கல்லோலப்பட்டிருக்கும். ஆகையால்தான் முதலாவது அமர்வின் போது, சி.வி.விக்னேஸ்வரனின் உரையை எதிர்க்கவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஆனால், அரசாங்கம் தவறிழைத்துவிட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் ராமநாதனுக்கும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அத்தாவுல்லாவுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.
இனத்தின் வீரராகுவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிகிறார். அதனால்தான் முதலாவது அமர்விலேயே மேற்கண்டவாறு உரையாற்றினார்.
திருமண வீட்டில் குடித்திருக்கும் ஒருத்தரை அடித்துவிட்டால், திருமண வீட்டின் உறவினர்கள் குழப்பமடைவர். அதனால்தான், முதலாவது அமர்வின் போது அமைதியாக இருந்துவிட்டேன் என்றார்.