குளவி தாக்குதலுக்குள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் மூக்கில் இருந்து 11 குளவிகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பாரிய அளவிலான குளவி கொடுக்குள் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக வைத்தியர்கள் மூன்று பேரும் 6 தாதிமார்களும் இரண்டு மணித்தியாலங்கள் செயற்பட்டுள்ளதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கலஉட பிரதேசத்தில் இருந்து பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட 70 வயதுடையவரே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளார்.
காட்டுப் பகுதியில் இலை வகை ஒன்றை பறிக்க சென்ற போதே குறித்த நபர் இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.
பின்னர் பிரதேச மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.