web log free
December 29, 2024

கையடக்க தொலைபேசியில் புதிய வசதி

இலங்கை மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி இணைப்பு சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் நோக்கில் இந்த வாய்ப்பினை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய பாவனையாளர்களுக்கு விரும்பிய போன்று வேறு தொலைபேசி சேவையின் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் சேவைகளை செயற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள 071 , 077 , 072 , 078 மற்றும் 075 என்ற இலக்கங்களை பொது இலக்கங்களாக அறிவிக்கப்படவுள்ளது.

பாவனையாளர்களுக்கு தங்கள் இலக்கங்களை மாற்றாமல் வேறு சேவை நிறுவனத்திற்கு மாறக் கூடிய வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 26 August 2020 01:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd