கொரோனா வைரஸ் தொற்றொழிப்பு தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் கிடைக்கும் வரையிலும் பாராளுமன்றத்தில் மக்கள் கலரிகள் யாவும் இழுத்து மூடப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் அலுவலகம் அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரையிலும் கலரிகள் மூடப்படும் என்றும் சுகாதார வழிகாட்டல்கள் கிடைத்ததன் பின்னரே மீளவும் திறக்கப்படும் என்றும் அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.