எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் இரண்டு உறுப்பினர்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதனால், அவ்வணிக்குள் ஒரு குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன், கன்னியமர்வில் ஆற்றிய உரை தொடர்பில், சஜித் அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் கருத்து முரண்பாடு தோன்றியுள்ளது.
முன்னதாக கருத்துரைத்த மனுஷ நாணயக்கார, சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டிலிருந்து அகற்றுமாறு கோரியிருந்தேன் எனினும் அது அகற்றப்படவில்லை. சி.வியின் உரை அவ்வாறே பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே எழுந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், உறுப்பினர்களு்க்கு பேச்சு சுதந்திரம் உள்ளது என்றார்.
இவ்விருவரும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியை சேர்ந்தவர்கள் என்பதனால் குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.