மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள “சொக்கா மல்லி” என்றழைக்கப்படும் பிரேமலால் ஜெயசேகரவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜெயசேகர பாராளுமன்றில் கலந்துகொள்வது குறித்து நீதி அமைச்சு சட்டமா அதிபரிடம் வினவியது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ள சட்டமா அதிபர் திணைக்களம், அரசியலமைப்பு விதிகளை மேற்கோளிட்டு பாராளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை என குறிப்பிட்டுள்ளது.