web log free
January 05, 2026

கடத்தப்பட்ட வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு எரிப்பு

ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த இரண்டு வர்த்தகர்களும் கொலை செய்யப்பட்டு, வலஸ்முல்ல, மெதகங்கொட பிரதேச வனப்பகுதியில் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd