web log free
May 23, 2026

பாதெனியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் (GMOA) தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த வழக்கினை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபேசேகர, மே மாதம் 10ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சரத் விஜயசூரிய மற்றும் காமினி வியங்கொட ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சைட்டம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அனுருத்த பாதெனிய உரையாற்றியதாக முறைப்பாட்டாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd