web log free
March 26, 2026

14 நாட்களுக்கு மன்னார் பூட்டப்பட்டது

மன்னார், பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக எதிர்வரும் 14 நாட்களுக்கு முடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன் குறித்த ரயில் நிலைய ஊழியர்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா, பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச்சென்றவர் நேற்று மாலை மன்னார் செளத்பார் ரயில் நிலையப் பகுதியில்வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் மன்னார் செளத்பார் ரயில் நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் நடமாடித் திரிந்ததையடுத்து குறித்த ரயில் நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து மன்னார் வரும் ரயில்களும் அங்கு தரித்து நிற்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளை ரயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அதேநேரம், நேற்று மன்னார் ரயில் நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ரயில் நிலைய ஊழியர்களுக்கு பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், இன்று மன்னார் பிரதான ரயில் நிலையப் பகுதிகளில் மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd