web log free
February 08, 2026

சமந்தா பவர் வருகிறார்

ஐ. நா. வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் - எதிர்வரும் 27 ஆம் திகதி, தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவிருக்கின்றார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருடகால அரசியல் வாழ்வை கௌரவிக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது.

பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட்ட பிரமுகர்கள் அதில் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
அந்த வைபவத்தில் விசேட அதிதியாக சமந்தா பவர் கலந்துகொள்ளவுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd