web log free
January 07, 2025

நிழல் உலக தாதா சுட்டுப்படுகொலை

பாதாளகுழு உறுப்பினரான ரத்மலானே ரொஹா என்ற ரோஹன டி சில்வா, இன்று (24) அதிகாலை நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் இயந்திரப் படகு மூலம் அவர் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தபோதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், ஒரு இலட்சம் இந்திய ரூபாவும் மீட்கப்பட்டுள்ளன.

படுகொலை மற்றும் போதை பொருட் கடத்தல் குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக உள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd