web log free
January 07, 2025

தனியாக இருந்த இளம்பெண்... பதற வைக்கும் கொடூரம்.!

உத்தரபிரதேச மாநிலத்தின் பர்சோலி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங். இவரது குடும்பத்திற்கு கன்வர் சிங் என்பவரது குடும்பத்திற்கு நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஒரு நாள் இரு குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட சண்டையில் கன்வர் சிங் அடித்து கொல்லப்பட்டார். மேலும் பல பேருக்கு காயம் ஏற்பட்டது.

அதனையடுத்து பொலிஸார் பிரதீப் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்வர் சிங் இறந்ததிலிருந்து பிரதீப் சிங்கின் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர் கன்வர் சிங் உறவினர்கள்.

அந்த தருணத்தில் சிறையில் இருக்கும் பிரதீப் சிங்கை பார்க்க அவரது மனைவி சென்றுள்ளார். அவரது மகள் ஷரதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் தனிமையில் இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டு உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.

அதன்பின் வலியால் துடித்த ஷரதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அங்கு ஷரதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷரதா இறப்பதற்கு முன் தனக்கு நிகழ்ந்த கொடூர சம்பவத்தை வாக்குமூலமாக கொடுத்ததை அடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd