web log free
January 07, 2025

முகம் கழுவ சென்ற குடும்பஸ்த்தர் பரிதாப பலி

யாழில் முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்த்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ்.தொண்டமனாறு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தொண்டமனாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் (வயது-35) 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கிச் சரிந்த நிலையில் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அவரை அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலம் மந்திகை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd