web log free
January 07, 2025

குழந்தைகளுக்கான டயபர்களில் விஷப்பொருள்

குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயபர்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

டயபர் இன்றைக்கு எல்லா சிறுகுழந்தைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிலர் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு டயபரை அணிவித்திருப்பர்.

அவர்களைப் பொறுத்தவரை டயபரினை அணிவிப்பதே சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்று கருதுகின்றனர். ஆனால் அவை உண்மை இல்லை.

தற்போது அவை குழந்தையின் உடல்நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பெருத்த கெடுதலை உண்டாக்கக் கூடிய மிகப்பெரிய‌ எதிரியாக மாறியுள்ளது.

அதாவது டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் குழந்தைகள் பயன்பாட்டிற்கு விற்கப்படும் டயபரில் 'ப்தலேட்' எனப்படும் விஷப்பொருள் கலந்திருப்பது கண்டறிந்துள்ளது.

இவை குழந்தைகளின் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ப்தலேட் எனப்படும் வேதிப்பொருள் கலந்த டயபரை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டயபரில் ப்தலேட் வேதிப்பொருள் கலப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ப்தலேட் கலந்த டயபர்களுக்கு இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளுக்கு டயபரை பயன்படுத்தும்போது ப்தலேட் வேதிப்பொருள் எளிதில் உடலுக்குள் செல்லும் ஆபத்து குறித்தும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd