web log free
May 14, 2025

விடிவு காலம் பிறந்தது !

கொரோனா ஊரடங்கில் 5-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது இந்திய அரசு. அதில் திரையரங்குகளை அக்டோபர் 15-ஆம் திகதி முதல் 50 % இருக்கைகளை பார்வையாளர்களைக் கொண்டு நிரப்பி மீண்டும் நடத்தத் தொடங்கலாம், காட்சிகளைத் திரையிடலாம் என்று அறிவித்துள்ளது.

இதன்மூலம் கடந்த 7 மாதங்களாக மூடிக்கிடந்த திரையரங்குகளுக்கு இந்தியாவில் விடிவுகாலம் பிறந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா நோய் கட்டுக்குள் வந்துள்ளது என நம்பப்படுகிறது. ஆனால், நோய் கட்டுக்குள் இல்லாமல் தற்போது சென்னையில் மட்டுமே நாள் ஒன்றுக்கு 1300 தொற்றுகளைச் சந்தித்து வருகிறது.

மாநில அளவில் 5.500 தொற்றுக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரையரங்களைத் திறப்பது மேலும் ஆபத்தில் முடியலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்குகள் திறப்பு தொடர்பாக, இன்று மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்தது. மேற்கு வங்கத்தில், அக்., 1 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என, அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலைமைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப தளர்வுகளை முதல்வர் அறிவித்து வருகிறார். மத்திய வழிகாட்டி நெறிமுறைகள், மருத்துவ நிபுணர் குழு கருத்துகளை கேட்டறிந்து, விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd