தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 26 அடையாள அட்டைகள், 88 கடவுச் சீட்டுகள் மற்றும் 3 ஓட்டுனர் அனுமதி பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.