கடந்த 24 மணிநேரத்திற்குள் ஊரடங்குச் சட்டத்தை மீறிய சந்தேக நபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஒருவாரத்திற்குள் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய 27 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டமானது தொடர்ந்தும் மறுஅறிவித்தல்வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது