web log free
February 08, 2026

அறிக்கை கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கருத்து வெளியிட்டார்.

இந்த நிலையில், அவரது கருத்துத் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த குழுவின் அறிக்கை இன்றைய தினம் பிரதமர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் குழு கூட்டத்தின் போது குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் அமைக்கப்பட்ட குறித்த குழுவின் அறிக்கையே இன்றைய தினம் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd