சர்வதேச தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்த அட்மிரல் வசந்த கரண்னாகொடவை கைதுசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமை காரணமாக மேற்கத்தேய நாடுகளில் தலைவர்கள், இலங்கை அரசாங்கத்தின் மீது கடுங்கோபத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடுங்கோபத்தில் உள்ள சர்வதேச தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அட்மிரல் வசந்த கரண்னாகொட கைதுசெய்யபப்பட்டால் அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தமது நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அனுசரனை வழங்கிய உலகின் முதல் நாடாக இலங்கை காணப்படுவதாகவும்
உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.