முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலருக்கு இன்று விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கும் இன்று விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.