கடந்த வருடம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில், சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்டு அறிக்கையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்ப்பானது என, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த அறிக்கையை அதனை தாம் முழுமையாக நிராகரிப்பதாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அங்கு கூறுகையில், “2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பான விசாரணைகளுக்காக, பிரதி சாபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையானது பக்கசார்புடைய பச்சை அறிக்கை என்றுதான் கூறவேண்டும். இந்த அறிக்கையில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 54 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் 1 உறுப்பினர்
தவறிழைத்தவர்களாக பெயரிடப்பட்டுள்ளது.
சபையின் நடுவில் பிரவேசித்தமை தொடர்பில் உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவுக்கு வந்திருக்கின்றார்கள்.
இவ்வாறான சந்தரப்பங்களில் இதுவரை உறுப்பினர்கள் தவறிழைத்ததாக தெரிவிக்கப்படவோ அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவோ இல்லை.
அவ்வாறொன்றால் இது எவ்வாறு திடீரென குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறு இழைத்திருந்தால் அவர்கள் கட்சி நிற பேதம் பார்க்காமல் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனினும் குறி குழுவானது, பச்சை
கட்சியை காப்பாற்றி நீல மற்றும் சிவப்பு நிற கட்சிகளின் உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது. எனவே இந்த அறிக்கையை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம்” என்றார்.