விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக அவர் நீர்கொழும்பு பள்ளன்சேன சிறைச்சாலைக்கு நேற்று (19) இரவு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்கு வரும் கைதிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பள்ளன்சேன சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
அதற்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைளுக்காக அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரிஷாட் எம்.பியின் ரிட் மனுமீதான விசாரணை, நவம்பர் 6 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.