நாட்டிற்கு புதிய அரசமைப்பு அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு புதிய அரசமைப்பே தேவை குறுகியகால அரசமைப்பு திருத்தங்கள் தேவையில்லை என கட்சியின் சிரேஸ்ட துணை தலைவர் ரோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேவை முழுமையான அரசமைப்பே என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்திஜீவிகள் கட்சிதலைவர்களை உள்ளடக்கிய அரசமைப்பு பேரவையை ஏற்படுத்துவதன் மூலம் கருத்தொருமைப்பாட்டுடனான அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20வது திருத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி பிரதமரிடம் முன்வைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.