ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம், பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்றது.
இக்குழுக்கூட்டத்தில், சர்ச்சைக்குரிய எம்.பியான விஜயதாஸ ராஜபக்ஷ பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சிக்குள் இருந்துகொண்ட, அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தை கடுமையாக விமர்சனத்துக்கு உட்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இதுவும் ஆளும் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.