web log free
May 23, 2026

சு.கவினர் கட்சி மாறுவதற்கு முயற்சி


ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறிய உறுப்பினர்கள், மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்வதற்கு முயற்சிக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள், சுதந்திரக் கட்சியின் தலைவர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சந்திப்பதற்கு பல முறை முயற்சித்தபோதிலும், அதற்கு ஜனாதிபதி, நேரம் ஒதுக்கவில்லையென அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கமாட்டேன் என, ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தையடுத்து, அவர்கள், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd