தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையமொன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு, இந்திய அரசாங்கம் 25 கோடி ரூபாவை நிதியுதவிச் செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த மத்திய நிலையத்தின் ஊடாக, வடமாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஏனைய தொழில்துறை சேவைகளுக்கான சந்தர்ப்பம் கிடைக்குமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதற்கப்பால், புனவர்வாழ்வளிப்பு மற்றும மீள் குடியேற்றத்துக்கான பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தினால், 46 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதுடன் 1990 எனும் அவசர அம்புலன்ஸ் சேவைகளும் அந்த மாகாணத்தில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.