web log free
May 14, 2025

பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று

குளியாபிட்டி பிரதேசத்தில் திருமண வீடொன்றுக்கு சென்ற  பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என,  பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி எல்லாவெல தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மாலபே நெவில் பெனாண்டோ வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி தனது  கணவருடன் குறித்த பெண், திருமண வைபவத்திற்கு சென்றிருந்தார். இதன்போது திருமண வீட்டில் குறித்த மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி கொரோனா  தொற்று இனங்காணப்பட்டமையின் பின்னர், திருமண வீட்டிற்குச் சென்ற குறித்த பெண்ணும் அவரது கணவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 20ஆம் திகதி கிடைக்கப் பெற்ற PCR பரிசோதனையின் அறிக்கைக்கு அமைய, குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த  பெண்ணுடன் நெருங்கிப் பழகிய பன்னிப்பிட்டி பிரதேசத்திலுள்ள 31 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவருக்கும் நேற்று (22) PCR பரிசோதனைக்கு உட்படுத்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd