ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை, குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து, இன்று (26) தீர்ப்பளித்தது.
அவருக்கெதிராக, போதைப்பொருள் வர்த்தகம், உடமையில் வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுகளே சுமத்தப்பட்டிருந்தன. மேற்படி வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷசி மஹேந்திரனால் வழங்கப்பட்டது.
சந்தேகநபர், கொழும்பு-14, எச்.ஆர் ஜோதிபால மாவத்தையில், 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று 105 கிராம், ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.